இலவச பொங்கல் பொருட்களை ஜன.30-ம் தேதி வரை பெறலாம்

புதுவை மக்கள் இலவச பொங்கல் பொருள்களை ஜன.30-ஆம் தேதி வரை பெறலாமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மக்கள் இலவச பொங்கல் பொருள்களை ஜன.30-ஆம் தேதி வரை பெறலாமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, புதுச்சேரி அரசு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி அரசால் அனைத்து குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி - 1 கிலோ, சர்க்கரை - 1 கிலோ, துவரம் பருப்பு - அரை கிலோ, உளுத்தம் பருப்பு அரை கிலோ, பச்சை பருப்பு அரை கிலோ, வெல்லம் - அரை கிலோ, முந்திரி பருப்பு - 25 கிராம், உலர் திராட்சை - 25 கிராம், ஏலக்காய் - 25 கிராம் என 9 விதமான பொங்கல் பொருட்கள் இலவசமாக நியாய விலைக்கடைகள் மூலம் தற்போது வழங்கப்படுகிறது.

இந்த இலவச பொங்கல் பொருட்களை அனைத்து குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களும், ஜனவரி 30-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுதாக அதில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com