கிரானைட் முறைகேடு வழக்கு: மத்திய அரசின் மேலும் 5 துறைகள் பதிலளிக்க நோட்டீஸ்

கிரானைட் முறைகேடு வழக்கில், மேலும் 5 மத்திய அரசின் துறைகள், தமிழக அரசின் வருவாய் துறையையும்

கிரானைட் முறைகேடு வழக்கில், மேலும் 5 மத்திய அரசின் துறைகள், தமிழக அரசின் வருவாய் துறையையும் எதிர்மனுதாரர்களாக சேர்ப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த 2014-இல் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், ‘மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி, தமிழகத்தில்  கனிமவளக் கொள்ளை நடைபெறுவதைத் தடுக்கவும், அதற்கு உடந்தையாக செயல்பட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக மட்டும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நியமித்தது.

நீதிமன்ற உத்தரவுபடி, விசாரணையை முடித்து கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் 23-இல் தனது அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த அறிக்கை தொடர்பாக, தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட, எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும், இந்த வழக்கு குறித்து தனது நிலைப்பாட்டை சிபிஐ-அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டு்ம்.

இந்த 2 அறிக்கையும் வந்த பிறகு, கிரானைட் முறைகேடு வழக்கை யாரிடம் ஒப்படைப்பது? என்பது குறித்து இந்த நீதிமன்றம் முடிவு எடுக்கும். மேலும் சகாயம் குழு பரிந்துரை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முடிவு செய்வதற்கு, மேலும் 6 வார காலம் அவகாசம் வழங்கியும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் உதவி இயக்குநர் வி.கார்த்திகேயன் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதபையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை பதிவாளர், மண்ணியல் துறை, சுரங்கத்துறை, தேசிய பல்லுயிர் ஆணையம், விலங்கியல் ஆய்வுத்துறை ஆகியவற்றையும், தமிழக வருவாய் துறையையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்து, அவர்கள் தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும் தமிழக அரசின் ஒருங்கிணைந்த திட்டத்தைத் தாக்கல் செய்ய 6 வார கால அவகாசம் வழங்கி, வழக்கை பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com