சட்டப்பேரவை குழுக்களை அமைக்கக்கோரி மனு: சட்டப்பேரவை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ்

சட்டப்பேரவைக் குழுக்களை அமைக்கக்கோரி எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த மனுவுக்கு, பேரவை செயலாளர், அவை முன்னவர் உள்ளிட்டோர்

சட்டப்பேரவைக் குழுக்களை அமைக்கக்கோரி எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த மனுவுக்கு, பேரவை செயலாளர், அவை முன்னவர் உள்ளிட்டோர் ஒரு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, சட்டப் பேரவை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு விவரம்: கடந்தாண்டு மே 16-இல் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 89 தொகுதிகளில் வெற்றி பெற்று, திமுக எதிர்கட்சியாக உள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் 15-ஆவது தலைவரும் தேர்வாகி, ஆறு மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால், இதுவரை சட்டப் பேரவை நிலைக்குழு, பொதுக்கணக்கு குழு, உரிமைக்குழு, விதிகள் குழு, பொது நிறுவனங்கள் குழு, அலுவல் ஆய்வுக் குழு உள்ளிட்ட 12 குழுக்கள் அமைக்கப்படவில்லை.

இந்தக் குழுக்களை அமைக்குமாறு ஆளுநர், பேரவைத் தலைவர் உள்ளிட்டோருக்கு டிசம்பர் மாதம் மனு கொடுத்தேன். அப்போது உரிய நேரத்தில் விரைந்து முடிவெடுக்கப்படும் என, உத்தரவாதம் அளித்துவிட்டு, இதுவரை குழுக்கள் அமைக்கப்படவில்லை என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், திமுக.வுக்கு 89 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர்.

எனவே, இந்தக் குழுக்களில் போதியளவில் ஒவ்வொரு குழுக்களிலும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இந்தக் குழுக்கள் முழு அளவில் செயல்படும்பட்சத்தில், ஆளும் கட்சியின் தவறான ஆளுமை, குற்றங்கள் வெளிப்படும் என்பதாலேயே குழுக்களை அமைக்காமல் தயக்கம் காட்டுகிறது என்றார்.

இதையடுத்து, இந்த மனுவுக்கு சட்டப்பேரவை செயலாளர், தலைமை செயலாளர், அவை முன்னர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com