அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு

அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு

அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக முலாயம் சிங் - அகிலேஷ் யாதவ் இடையே சைக்கிள் சின்னத்தை கைப்பற்ற போட்டி நிலவியது.

இதனிடையே அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

இதற்கிடையில் லக்னோ நகரில் உள்ள சமாஜ்வாடி கட்சியின் தலைமை அலுவலத்தில் இன்று தனது ஆதரவாளர்களிடையே பேசிய முலாயம் சிங் யாதவ் சைக்கிள் சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் என்ன தீர்ப்பு அளித்தாலும், என்னையும் தேர்தல் ஆணையம் அளிக்கும் சின்னத்தையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும் என தனது ஆதரவாளர்களை அவர் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com