ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு..!

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஜல்லிக்கட்டை நடத்தும் குழுவினர் முறைப்படி மாவட்ட ஆட்சியரிடம்
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு..!

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் அதற்கான விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன.

பீட்டாவை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நிரந்தர தீர்வு தேவை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆறாவது நாளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன.
அதில்,
- ஜல்லிக்கட்டை நடத்தும் தனிநபர், அமைப்பு அல்லது குழுவினர் முறைப்படி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.
- ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடத்தை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும்.
- மாடுபிடி வீரர்களின் பெயர்கள், காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- ஜல்லிக்கட்டை கண்காணிக்க வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறையினர் அடங்கிய குழு அமைத்து கண்காணிக்கப்பட வேண்டும்.
- ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் களத்துக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு 20 நிமிடங்கள் ஓய்வளிக்கப்பட வேண்டும்.
- போட்டிக்கு முன் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்
- காளைகள் நிறுத்தப்படும் இடத்தில் அவற்றுக்கு இடையே 60 சதுர அடி அளவில் போதிய இடைவெளி அளிப்பதுடன், பாதுகாப்பாக உணர காளையின் உரிமையாளர் அருகில் இருக்க வேண்டும்.
- காளைகள் நிறுத்தப்படும் இடத்தில் மழை, வெயில் பாதிக்காமல் கூடாரம் அமைத்திருக்க வேண்டும்.
- ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியின் முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும்.
- மது உள்ளிட்ட எதையும் காளைகளுக்கு வழங்கப்படாததை உறுதி செய்வதுடன், காளையை அடக்குவோர் 15 மீட்டர் தூரத்திற்கு திமிலை மட்டுமே பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும்.
- வால் போன்றவற்றை பிடிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட வழிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com