நிரந்த தீர்வு: போராட்டக்காரர்களிடம்  முதல்வர் நேரில் தெளிவுபடுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை ஜல்லிக்கட்டுக்கு இனி எக்காலத்திலும் நீதிமன்ற தடை வராதபடி என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
நிரந்த தீர்வு: போராட்டக்காரர்களிடம்  முதல்வர் நேரில் தெளிவுபடுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை ஜல்லிக்கட்டுக்கு இனி எக்காலத்திலும் நீதிமன்ற தடை வராதபடி என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை போராட்டக்காரர்களை முதல்வர் நேரில் சந்தித்து தெளிவுபடுத்த வேண்டும் என திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பங்கேற்புடன் இளைஞர்களும், மாணவர்களும் உருவாக்கிய எழுச்சிமிக்க போராட்டம் மத்திய-மாநில அரசுகளை அசைய வைத்திருப்பதே தைப் புரட்சி என்றும் மெரினா புரட்சி என்றும் வர்ணிக்கப்படும் தமிழர்களின் வரலாற்ற சிறப்புமிக்க புரட்சிக்கு கிடைத்துள்ள முதல் கட்ட வெற்றியாகும்.

இளைஞர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு இரு அரசுகளும் செயல்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. உரிய காலத்தில், பொங்கல் விழாவிலேயே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் வகையில் அவசர சட்டம் நிறைவேற்றியிருந்தால், மக்களின் போராட்டத்திற்கு அவசியமிருந்திருக்காது.

அந்த காலதாமதத்தின் விளைவாக  இந்த அவசர சட்டமே நிரந்தரச் சட்டம் தான் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொல்வதை மக்கள் நம்ப மறுக்கிறார்கள். அலங்காநல்லூரில் முதல்வர் தொடங்கி வைக்க நினைத்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அந்த ஊர் மக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட இடங்களிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

மக்களின் நம்பிக்கையைப் பெறாத நிலையில், ஒரு சட்டம் எவ்வளவு தான் பாதுகாப்பானதாக இருந்தாலும்- தாற்காலிகமாக உரிமைகளை மீட்பதாக இருந்தாலும், அது நடைமுறைப் பயனைத் தராது.

எனவே, அவசர சட்டமே நிரந்தர சட்டம் என்று சொல்வதை முதல்வர் தவிர்த்து, இனி எக்காலத்திலும் நீதிமன்றத் தடை வராதபடி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை போராட்டக் களத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களை நேரில் சந்தித்துப் பேசி தெளிவுபடுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com