பீட்டாவை தடை செய்ய வேண்டும்: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்!

பீட்டா அமைப்பை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: பீட்டா அமைப்பை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

பழ.நெடுமாறன் எழுதிய வள்ளலார் மூட்டிய புரட்சி நூல் வெளியீட்டு விழா விழுப்புரத்தில் நடைப்பெற்றது. இதில் கலந்துக்கொண்ட பழ.நெடுமறான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் பெரும் புரட்சியை நடத்தி இருக்கிறார்கள், இந்த போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் மாணவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள் என்று கருதக்கூடாது. இந்திய அரசால் தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. காவேரி, முல்லைப்பெரியாறு, இலங்கை தமிழர் பிரச்சனையிலும் காங்கிரஸ் அரசும் தொடர்ந்து பாஜக அரசும், தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்று இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் இருந்த கொதிப்பு தற்போது வெளிவந்துள்ளது என்றார்.

மேலும், பீட்டா அமைப்பு தடை செய்ய வேண்டும் என்று மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. பீட்டா அமைப்பு ஒரு அன்னிய நாட்டு அமைப்பு ஆகும், அன்னிய நாட்டுப்பணம் நம் நாட்டிற்க்கு வரக்கூடாது என்று மத்திய அரசு சொல்கிறது. வெளிநாடுகளிலிருந்து தன்னார்வு தொண்டு நிறுவணம் மூலம் நம் நாட்டிற்க்கு வரும் பணத்தை மத்திய அரசு தடை செய்தது. அதே நேரத்தில் அமெரிக்காவில் தலைமை இடமாக கொண்டு இயங்கும் பீட்டாவுக்கு இங்கு கிளை அமைத்து செயல்பட்டு வருகின்றனர். இங்கு அவர்களுக்கு பணம் எப்படி வருகின்றது என்று கேள்வி எழுப்பியவர், தமிழகத்தில் நாட்டு மாட்டை ஒழித்துவிட்டு, ஜெர்சி மாட்டை இறக்குமதி செய்வதற்க்காகவே பீட்டா அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கியது. இப்படிப்பட்ட பீட்டா அமைப்பை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். அந்த அமைப்பை தமிழக்தில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com