புதுக்கோட்டையில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு: ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில்
புதுக்கோட்டையில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு: ஒருவர் பலி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் தமிழக அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டு, அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு நேற்று சனிக்கிழமை மாலை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்விடம் ஒப்புதல் பெறப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்ட உத்தரவை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீக்கப்பட்டாலும் நிரந்தர தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினாவிலும், அலங்காநல்லூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, புதுக்கோட்டை அருகே ராப்பூசல் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

ராப்பூசல் கிராமத்தில் வாடிவாசல் திறக்கப்பட்டதும், காளைகள் சீறிப் பாய்ந்தன. 50-க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டுக்காக அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்.
அப்போது, வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளையை பிடித்தபோது மாடு முட்டி வீரர் மோகன் என்பவர் உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com