திருமணத்திற்கு தடையாக இருந்ததால் உடன் பிறந்த அக்காவையே கழுத்தை நெரித்து கொன்ற அவலம்!!

தனது திருமணத்திற்கு தடையாக இருந்த காரணத்தால் உடன் பிறந்த அக்காவை கழுத்தை நெரித்து கொலை செய்த தம்பி பெங்களூரில் கைது.
திருமணத்திற்கு தடையாக இருந்ததால் உடன் பிறந்த அக்காவையே கழுத்தை நெரித்து கொன்ற அவலம்!!


தனது திருமணத்திற்கு தடையாக இருந்த காரணத்தால் உடன் பிறந்த அக்காவை கழுத்தை நெரித்து கொலை செய்த தம்பி பெங்களூரில் கைது.

பெங்களூருவை சேர்ந்த நஞ்சுண்டப்பா என்பவரின் மகள் மகாலட்சுமி (28) ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தன் தாய் இறந்த துக்கத்தாலும், உடல் பருமனாக இருப்பதாலும் மனசோர்வு அடைந்த நிலையில் இருந்துள்ளார். 

இவரது தம்பி சிவகுமார் (24) நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். ஆனால் அக்காவை பார்த்துக்கொள்ள வீட்டில் யாராவது இருக்க வேண்டும் என்பதால் ஒரு வருடத்திற்கு முன்பு வேலையை செய்துவிட்டு இவரும் வீட்டிலேயே அக்காவுடன் இருந்துள்ளார். இந்நிலையில் அக்கா இவ்வாறு இருப்பதாலும், இவருக்கு தகுந்த வேலை இல்லாத காரணத்தாலும் இவருக்கு பெண் தர யாரும் முன் வரவில்லை. 

இதனால் ஆத்திரம் அடைந்த சிவகுமார், தன் அக்காவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். எப்பொழுதும் மகாலட்சுமி மதிய உணவிற்கு பிறகு மாலை வரை உறங்குவார், அன்றும் அதேபோல் அவர் உறங்கும் நேரம் பார்த்து இதுதான சரியான வாய்ப்பு என்று கருதி பிளாஸ்டிக் கம்பியை வைத்து மகாலட்சுமியின் கழுத்தை நெரித்துள்ளார் சிவகுமார். அவர் இறந்துவிட்டார் என்று உறுதி செய்த பின் அமைதியாக அந்த இடத்தைவிட்டு விலகியுள்ளார்.

தூக்கத்தில் இருந்து தன் மகள் விழிக்காததை கண்டு பயந்து மருத்துவமணைக்கு மகாலட்சுமியை தூக்கிச் சென்றார் அவரது தந்தை. பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ந்துள்ளார். வேகுநாட்களாக மனதளவில் அமைதியிழந்த நிலையில் தன் மகள் இருந்ததால் தற்கொலை செய்துக்கொண்டதாக முதலில் எண்ணியிருந்தார் நஞ்சுண்டப்பா. ஆனால், பிரேத பரிசோதனையில் இது கொலையென்று காவல் துறைக்கு தெரிய வந்துள்ளது. 

கொலைக்கான காரணத்தை காவலர்கள் விசாரித்து வந்த நிலையில், தனது திருமணத்திற்கு இடையூறாக இருந்த காரணத்தால் சிவகுமார்தான் கொலை செய்துள்ளார் என்பதை கவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் சிவகுமாரே கொலைக்குற்றத்தை ஒப்புகொண்டதை தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 302-ம் பிரிவின் கீழ் கடந்த வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com