தண்டனையை ரத்து செய்ய கோரி புதிய குடியரசுத் தலைவருக்கு முன்னாள் நீதிபதி கர்ணன் மனு

நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக இன்று பதவியேற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு முதல் மனுவை முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் மனு அனுப்பி உள்ளார்.
தண்டனையை ரத்து செய்ய கோரி புதிய குடியரசுத் தலைவருக்கு முன்னாள் நீதிபதி கர்ணன் மனு

புதுதில்லி:  நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக இன்று பதவியேற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு முதல் மனுவை முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் மனு அனுப்பி உள்ளார். அதில், தனக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய குடியரசுத் தலைவராக இன்று பதவி ஏற்ற சில நிமிடங்களில் அவருக்கு முதல் மனு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் செயலாளர், கூடுதல் செயலாளர் மற்றும் தனி செயலாளருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. நேரடியாகவும் மனுவை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என கர்ணனின் வழக்கறிஞர் குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக, பரோல் வழங்கக் கோரி மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதிக்கு முன்னாள் நீதிபதி கர்ணன் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com