அப்துல் கலாம் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைக்க நாளை ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைக்க
அப்துல் கலாம் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைக்க நாளை ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை ராமேஸ்வரம் வருகிறார். இதையொட்டி அங்கு துகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 11-ஆவது குடியரசுத் தலைவரான அப்துல் கலாம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் காலமானார். அவரது உடல், அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் உருவாக்கப்பட்டுள்ள அறிவுசார் மையத்தில், கலாமின் மெழுகுச் சிலை நிறுவப்படவுள்ளது.

மேலும் ராமேஸ்வரத்தை அடுத்த பேய்கரும்பில் ரூ.15 கோடி செலவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவு மணிமண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது. நினைவு மண்டபத்தை திறப்பதற்காக பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகிறார். அவரது வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்த ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பேய்கரும்பை சென்றடைகிறார்.

மதுரை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு அங்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் துணை ராணுவப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரும் பிரதமர் மண்டபத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதனிடையே அப்துல்கலாமின் மணிமண்டபத்தில் 700 அரிய புகை படங்களும், 900 ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஓவியத்தில் கலாமின் 50 முகத்தோற்றம் கொண்ட சிறப்பு ஓவியம் இடம்பெற்றுள்ளது. அப்துல்கலாமின் இளமைபருவத்தில் இருந்து குடியரசுத் தலைவர் ஆகியிருந்தது வரையிலான புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com