ஓ.பி.எஸ் கிணறு லட்சுமிபுரம் கிராம மக்களிடம் ஒப்படைப்பு

ஓ.பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய கிணறு லட்சுமிபுரம் கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 
ஓ.பி.எஸ் கிணறு லட்சுமிபுரம் கிராம மக்களிடம் ஒப்படைப்பு

தேனி: ஓ.பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய கிணறு லட்சுமிபுரம் கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

பெரியகுளத்தை அடுத்துள்ள லட்சுமிபுரத்தில் தனக்குள்ள விவசாய நிலங்களில் கிணறுகள் அமைத்து அதிவேக மின்மோட்டார்கள் மூலம் ஓ.பி.எஸ் அதிக அளவில் தண்ணீரை எடுப்பதாக கூறி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தேனியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடாச்சலம் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கிணறு மற்றும் அதை சுற்றியுள்ள 40 ஏக்கர் நிலத்தை கிராம மக்களுக்கே விற்பனை செய்ய ஓ.பி.எஸ் ஒப்புக் கொண்டதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் கடந்த 12-ம் தேதியன்று ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவியின் பெயரில் இருந்த கிணறு மற்றும் நிலம், அவரது நண்பரான சுப்புராஜ் என்பவருக்கு பத்திரம் பதியப்பட்டது.

இதனையறிந்த லட்சுமிபுரம் கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். ஓ.பி.எஸ் தங்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக கிராம மக்கள் கூறினர். இந்நிலையில் கிணறு மற்றும் போர்வெல்லை கிராம மக்களிடம் ஓ.பி.எஸ் தரப்பினர் இன்று ஒப்படைத்தனர். கிண்று மற்றும் போர்வெல்லை ஏற்றுக் கொண்டதாக லட்சுமிபுரம் கிராம கமிட்டி அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com