குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த சோனியா காந்தியை சந்தித்து பேச பா.ஜ.க முடிவு

புதிய குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த பா.ஜ.க மூன்று பேர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது.

இந்த குழு வரும் வெள்ளியன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சிபிஐ-எம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை சந்தித்து பேசவுள்ளனர்.

இந்த குழுவில் மத்திய அமைச்சர்களான ராஜ்நாத்சிங், வெங்கய்யா நாயுடு, மற்றும் அருண்ஜேட்லி ஆகியோர் உள்ளனர். பி.எஸ்.பி தலைவர் சத்ய சந்திர மிஸ்ரா மற்றும் என்.சி.பி. தலைவர் பிரபுல் படேல் ஆகியோருடன் வெங்கய்யா நாயுடு இன்று தொலைபேசியில் பேசினார்.

இருகட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 23-ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com