குடியரசு தலைவர் தேர்தல்: பா.ஜ.க. அறிவித்த தலித் வேட்பாளரை மம்தா பானர்ஜி, மாயாவதி ஏற்க மறுப்பு

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பிகார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக
குடியரசு தலைவர் தேர்தல்: பா.ஜ.க. அறிவித்த தலித் வேட்பாளரை மம்தா பானர்ஜி, மாயாவதி ஏற்க மறுப்பு

புதுதில்லி:  பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பிகார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி பா.ஜ.க. அறிவித்துள்ள வேட்பாளரை ஏற்க முடியாது.  நாட்டில் எத்தனையோ முக்கியமான தலித் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ராம்நாத் கோவிந்த் பா.ஜ.க.வில் உள்ள ஒரு தலித் தலைவர் அவ்வளவு தான் என்று மம்தா கூறினார்.

மேலும் ஜூன் 22-ம் தேதி நடைபெறவுள்ள எதிர்க்கட்சி கூட்டத்திற்கு பிறகு எங்களது முடிவை தெரிவிக்க முடியும் என்றும் மம்தா கூறியுள்ளார். அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அரசியல் சாயம் இல்லாத தலித் வேட்பாளரை காங்கிரஸ் கூட்டணி அறிவித்தால் பரிசீலிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கோவிந்த் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் லக்னோவில் பா.ஜ.க அலுவலகத்திற்கு வெளியே கொண்டாட்டங்கள் தொடங்கின. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com