
பழனிசாமி தலைமையிலான அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்: தம்பிதுரை
By DIN | Published on : 20th June 2017 05:32 PM | அ+அ அ- |

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை அதிமுக அம்மா அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்தல் ஆதரவு குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறும் போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்றும் கட்சியில் பிளவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.