ஒய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது

ஒய்வு பெற்ற முன்னாள் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது செய்யப்பட்டார்.
ஒய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது

ஒய்வு பெற்ற முன்னாள் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவரை கொல்கத்தா கொண்டு செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர்.  கடலூர் மாவட்டத்தில் பிறந்த கர்ணன், கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த தனக்கு சக நீதிபதிகள் சாதிரீதியாகத் தொல்லை கொடுப்பதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் கடந்த 2011-ஆம் ஆண்டில் அவர் புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, பிற நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காகக் கூறி, அவர் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார்.

இதையடுத்து, நீதிபதி கர்ணனை கொல்கத்தா நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. இந்தச் சூழலில், ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி 20 முன்னாள் மற்றும் இந்நாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை கர்ணன் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டார்.

 அதன் தொடர்ச்சியாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் மற்றும் 7 உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மீது வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கர்ணன் பிறப்பித்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து,  நீதிபதி கர்ணனுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் கர்ணனுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இதனைத் தொடர்ந்து கர்ணனை கைது செய்ய, கொல்கத்தா போலீசார் சென்னை வந்தனர். ஆனால் அவர் பல்வேறு இடங்களில் தேடினர். ஒரு மாதத்திற்கு மேலாக தேடியும் அவரை கண்டுபிடிக்க போலீசாரால் முடியவில்லை.

இதற்கிடையில் கடந்த 10ஆம் தேதி, நீதிபதியாக இருந்த கர்ணனின் பதவிக்காலம் முடிவடைந்தது. இந்நிலையில் கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் தலைமறைவாக இருந்த முன்னாள் நீதிபதி கர்ணன் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com