புதுவையில் ரெளடிகள் மிரட்டி பறித்த பல்வேறு சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணி  தீவிரம்

புதுவையில் ரெளடிகள் மிரட்டி பறித்த பல்வேறு சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என டிஜிபி சுனில்குமார்

புதுச்சேரி: புதுவையில் ரெளடிகள் மிரட்டி பறித்த பல்வேறு சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என டிஜிபி சுனில்குமார் கெüதம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை காவல் பிரிவு வளாகத்தில் காவலர்கள் வசதிக்காக பாரத ஸ்டேட் வங்கி சார்பில் புதிதாக ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை வியாழக்கிழமை திறந்து வைத்த  பின்னர் டிஜிபி கெüதம் செய்தியாளர்களிடம் கூறியதாவது

சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  மேலும் பல ரெளடிகள் மீது குண்டர் தடை சட்டம் பாயும். தனிப்படைகள் அமைக்கப்ட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரெüடிகளால் மிரட்டி பறிக்கப்பட்ட சொத்துக்கள் திரும்ப பெற்று தர பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு கெடாமல் இருக்க பறக்கும் புலிகள் படை  அமைக்கப்ட்டு இரவு நேரங்களில் ரோந்துப்பணியினை  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com