2017-ஆம் ஆண்டிற்கான ஃபெமினா மிஸ் இந்தியா:  ஹாரியானாவைச் சேர்ந்த மானுஷி சாலார் தேர்வு

2017-ஆம் ஆண்டிற்கான ஃபெமினா மிஸ் இந்தியா போட்டி நேற்று இரவு மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
2017-ஆம் ஆண்டிற்கான ஃபெமினா மிஸ் இந்தியா:  ஹாரியானாவைச் சேர்ந்த மானுஷி சாலார் தேர்வு

2017-ஆம் ஆண்டிற்கான ஃபெமினா மிஸ் இந்தியா போட்டி நேற்று இரவு மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

54வது ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் ஹாரியானாவைச் சேர்ந்த மானுஷி சாலார் வென்றுள்ளார். தவிர, வினைல் பட்நாகர் மிஸ் ஆக்டிவ் கிரீடம் வென்றார். அதேசமயம் 'உடல் அழகிய' சிறப்பு விருது வெமிகா நித்திக்கு வழங்கப்பட்டது.

இதற்கு அடுத்ததாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சனா துவா 2ம் பரிசையும், பீகாரைச் சேர்ந்த பிரியங்கா குமாரி 3ம் பரிசையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த முறை போட்டியில் திரிபுரா, அருணாச்சல பிரதேசம், உத்தரகண்ட், ஜார்கண்ட் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து இளம் பெண்கள் பங்கேற்றனர்.  முதல்முறையாக பங்கேற்பாளர்கள் மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த   இந்திய ஆடை அணிந்து இறுதிச் சுற்றில் வலம்வந்தனர்.

நேஹா துபியா, வலுஸ்கா டி சொஸா, தீபனிதா சர்மா மற்றும் பார்வதி ஓமனக்குட்டன் ஆகியோரால் நிகழ்ச்சி வழிநடத்தப்பட்டது. தென்னிந்திய பகுதி போட்டியாளர்களுக்கான ஆலோசகராக ’பில்லா-2’ படத்தில் நடித்து பிரபலமான,கேரளாவைச் சேர்ந்த நடிகை பார்வதி ஓமனக்குட்டன் நியமிக்கப்பட்டிருந்தார். 

ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் வென்ற மானுஷியின் பெற்றோர் மருத்துவர்கள், தில்லி புனித தாமஸ் பள்ளியில் படித்த இவர் சோனஸ்பாத்தில் உள்ள பகத் ஃபூல் சிங் அரசு மகளிர் மருத்துவ கல்லூரியில் பயின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com