குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ஜூலை 1-ம் தேதி சென்னை வருகை 

குடியரசு தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்கக் கோரி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள,
குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ஜூலை 1-ம் தேதி சென்னை வருகை 

குடியரசு தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்கக் கோரி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள, பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ஜூலை 1-ம் தேதி சென்னை வருகிறார்.

இதன் தொடக்கமாக, தனது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்துக்கு நேற்று சென்றார். அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்துக்குச் சென்ற ராம்நாத், மத்திய அமைச்சர்கள் உமா பாரதி, நிதின் கட்கரி, மாநில துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.

அப்போது பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களும் இருந்தனர். சென்னை வரும் அவர் தமிழக அரசியல் தலைவர்களிடம் ஆதரவு கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com