மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக  கே.கே.வேணுகோபால் நியமிக்கப்படலாம் என தகவல்

மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞரும் அரசியல் சட்ட வல்லுநருமான கே.கே.வேணுகோபால் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக  கே.கே.வேணுகோபால் நியமிக்கப்படலாம் என தகவல்

புதுதில்லி:  மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞரும் அரசியல் சட்ட வல்லுநருமான கே.கே.வேணுகோபால் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இப்பதவியில் இருந்த முகுல் ரோகத்கி பதவி விலகியதை அடுத்து அவ்விடத்திற்கு வேணுகோபாலை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறாது. வெளிநாட்டிற்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் இந்தியா திரும்பியதும் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் ஆகிய உயரிய விருதுகளை பெற்ற வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர். இவர் ஏற்கனவே ஒருமுறை மொரர்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது கூடுதல் அரசு வழக்கறிஞராக பதவி வகித்துள்ளார்.

பிரபலமான 2ஜி வழக்கிலும் அமலாக்கத் துறைக்காக வாதாடியவர். இப்போது அத்வானி உட்பட பலருக்கு அதே அயோத்தியா மசூதி இடிப்பு குற்றவியல் வழக்கில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com