குடியரசுத் தலைவர் தேர்தல்: ராம்நாத் கோவிந்த், மீராகுமார் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த், மீராகுமார் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.  

புதுதில்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த், மீராகுமார் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.  

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார், சோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சென்று புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும் ராம்நாத் கோவிந்த் சார்பில், அவரது வேட்புமனு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று சமர்ப்பித்தார்.

இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்தது. ராம்நாத் கோவிந்த், மீராகுமார் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன. 90 க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூலை 17-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, 20-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com