தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கப் பாடுபடுவோம்: குஷ்பு

நீட் தேர்வுக்கு ஏதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைப்பெற்றது.
தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கப் பாடுபடுவோம்: குஷ்பு

சென்னை: நீட் தேர்வுக்கு ஏதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைப்பெற்றது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் செய்தி தொடர்பார் குஷ்பு பேசும் போது தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கப் பாடுபடுவோம் என்று கூறினார்.

அதே சமயத்தில் தாம்பரத்தை தாண்டினால் தாமரையை யாருக்கும் தெரியாது ? . தாமரை என்றால் குளத்து தாமரையா என பெண்கள் கேட்பார்கள் என்று கேலியாக பேசினார்.

மேலும் மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் மோடி சொன்ன அத்தனை வி‌ஷயங்களும் தலைகீழாக நடக்கிறது. நீட் தேர்வு நமது மாணவ- மாணவிகளை எந்த அளவு பாதிக்கும் என்பதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

எந்த முடிவையும் பா.ஜ.க நிதானமாக எடுப்பதில்லை. திடீர் திடீரென்று இரவோடு இரவாக முடிவெடுக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் வெற்றி பெற்று விட்டதாக சொல்கிறார்கள்.

ஆனால் கோவாவிலும், மணிப்பூரிலும் பணபலத்தால் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஜனநாயக படுகொலை செய்ய பா.ஜ.க முயற்சிக்கிறார்கள் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com