நெல்லையில் 29இல் மாற்றத்தை நோக்கி திருநங்கைகள்: நடிகர் ராகவா லாரன்ஸ் பங்கேற்பு

திருநெல்வேலியில் வரும் 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள திருநங்கைகளை

திருநெல்வேலியில் வரும் 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள திருநங்கைகளை  ஒருங்கிணைத்து,  மாற்றத்தை நோக்கி திருநங்கைகள் எனும் நிகழ்வு நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, திருநெல்வேலி திருநங்கைகள் அமைப்பின் சார்பில், ஒருங்கிணைப்பாளர்கள் சுதா, பாரதி கண்ணம்மா ஆகியோர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

திருநங்கைகள் என்றாலே தவறான புரிதலுடன் கூடிய சமூகத்தை மாற்றவும், சக மனிதர்களைப் போல சமூகத்தில் வாழ்க்கை நடத்த வழிவகை செய்யவும் மாற்றத்தை நோக்கி திருநங்கைகள் எனும் நிகழ்வை திருநெல்வேலி சங்கீத சபாவில் வரும் புதன்கிழமை நடத்தவுள்ளோம்.

தனியார் நிறுவனங்களில் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், சுய தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் வழங்கவும் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கவுள்ளனர்.

மேலும், 2020இல் திருநங்கைகள் வாழ்வியல் மேம்பாடு எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெறும். தமிழக திருநங்கைகளின் குறும்படங்கள் திரையிடப்படும். திருநங்கைகளின் மேம்பாட்டுக்கு உதவும் நல் உள்ளங்களுக்கு மனிதம் விருதுகள் வழங்கப்படும். திருநங்கைகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். 

இந்த விழாவுக்கு மோகன் சி. லாசரஸ் தலைமை வகிக்கிறார். திருநங்கைகள் கங்கா நாயக், சீமா நாயக் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தயா மெட்டல் ஒர்க்ஸ் நிறுவனர் லட்சுமி ஆனந்தன் வரவேற்புரையாற்றுகிறார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக துணைவேந்தர் கி. பாஸ்கர் சிறப்புரையாற்றுகிறார்.

நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ரஞ்சித் ஆகியோர் பங்கேற்கின்றனர்.  மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு நீதிபதி ஜே. தமிழரசி, சட்டம் சார்ந்த உரிமைகள் குறித்து விளக்கிப் பேசுகிறார். இந்த விழாவில், திருநெல்வேலியைச் சேர்ந்த தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் என பலர் பங்கேற்கவுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com