ராணிப்பேட்டை அருகே பழைய  சாக்குப் பை கிடங்கில் பெரும் தீ விபத்து : லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் 

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே பழைய  சாக்குப் பை கிடங்கில் திடீரென ஏற்பட்ட பெரும் தீ விபத்தில்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே பழைய சாக்குப் பை கிடங்கில் திடீரென ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமனது. 

வேலூர் மாவட்டம் வாலாஜா வட்டம் படியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் ஏழுமலை(40) பழைய சாக்குப் பை வியாபாரி. இவர் ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான சிமெண்ட் கூரை வேய்ந்த கிடங்கை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த கிடங்கு முழுவதும் தோல் தொழிற்சாலைகளுக்கு தேவையான ரசாயனங்களை விநியோகிக்கும் சாக்குப் பைகளை விலைக்கு வாங்கி சேகரித்து தூய்மை செய்து விற்பனை செய்துவருகிறார்.


இந்நிலையில் மேற்கண்ட சேமிப்பு கிடங்கில் மலை போல் சேமித்து வைக்கப்பட்டிருந்த சாக்குப் பையின் ஒரு பகுதியில் சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் திடீரென தீ பற்றி மளமளவென சாக்குப் பை முழுவதும் தீ பரவி எரிந்து வானத்தை எட்டும் அளவுக்கு கரும்புகை எழுந்து தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த தகவல் அறிந்த அங்கு விரைந்து வந்த ஏழுமலை தீயை அணைக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் கேனில் இருந்து உருகிய பிளாஸ்டிக் ஏழுமலையின் கை,கால் முகம் ஆகிய பகுதிகளில் விழுந்து காயமடைந்தார்.  

அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.அதன் பேரில் சிப்காட் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து தீ கொழுந்துவிட்டு எரிந்து கரும்புகை அப்பகுதியை சூழ்ந்ததால் ஒரு தீயணைப்பு வாகனத்தால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிவில்லை. அகவே உடனடியாக ராணிப்பேட்டை,ஆற்காடு,பெல் ஆகிய தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டாட்சியர் ஆர்.ராஜலட்சுமி,வாலாஜா வட்டாட்சியர் டி.பிரியா, டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் தீயை அணைக்கும் பணிகளை முடுக்கிவிட்டனர்.

தொடர்ந்து நான்கு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் சுமார் 1 மணி நேர போராட்டத்துக்குப் பின் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதற்குள் கிடங்கில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்களும், சேமிப்பு கிடங்கும் முற்றிலும் எரிந்து நாசமானது.இந்த தீ விபத்து குறித்து ராணிப்பேட்டை போலீஸர் விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com