ஆஸ்திரேலியாவை தாக்கியது டெபி புயல்

ஆஸ்திரேலியாவை "டெபி புயல்" என அழைக்கப்படும் படுப்பயங்கரப் புயல் இன்று தாக்கி வருகிறது.
ஆஸ்திரேலியாவை தாக்கியது டெபி புயல்

ஆஸ்திரேலியாவை "டெபி புயல்" என அழைக்கப்படும் படுப்பயங்கரப் புயல் இன்று தாக்கி வருகிறது.

இந்த புயலின் போது காற்றானது 300கி.மீ வேகத்தில் வீசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து, ஏர்லி கடற்கரை, ஹாமில்டன் தீவு பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் தாக்கும் இடங்களிலுள்ள மக்களை அரசு அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த புயலானது இன்று கரையை கடக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது.

இந்த புயலுக்கு நான்காம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ளா முக்கிய நிறுவனங்கள் காலவரையின்றி விடுமுறை அளித்துள்ளனர். மேலும் முக்கிய விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் பெரும் சேததிற்குள்ளாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com