ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்: 50 ரௌடிகள் கைது

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

 ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இத் தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக இரு அணிகளாக போட்டியிடுவதால் பொதுமக்களிடம் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் தேர்தலினால் ஏதேனும் வன்முறைச் சம்பவங்களோ, அசம்பாவித சம்பவங்களோ நடைபெறாமல் இருப்பதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தேர்தல் நாளன்று சுமார் ஆயிரம் போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் 900 துணை ராணுவ படை வீரர்கள் வரவழைக்கப்படுகின்றனர். அதேவேளையில் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள ரௌடிகளையும், சமூக விரோதிகளையும் கைது செய்யும் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.

 இதில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 150 ரௌடிகளும், சமூக விரோதிகளும் இருப்பது போலீஸôருக்கு தெரியவந்துள்ளது.அவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும், தேர்தல் முடியும் வரை தொகுதியை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் இவ்வாறு சுமார் 50 ரௌடிகளை போலீஸôர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

காக்காத்தோப்பு பாலாஜி கைது:

 இதற்கிடையே முத்தியால்பேட்டையைச் சேர்ந்த பிரபல கூலிப்படைத் தலைவர் காக்காதோப்பு பாலாஜியை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.இவர் ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களை மிரட்டுவதாக வந்த புகாரின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை போலீஸôர், அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாலாஜி மீது கொலை,கொள்ளை,கொலை முயற்சி,அடிதடி என சுமார் 53 வழக்குகள் இருப்பது குறிப்பிடதக்கது.

 அதேபோல சில ரௌடிகளிடம், தாங்கள் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என போலீஸôர் எழுதி வாங்கி வருகின்றனர். இந்த உத்தரவாத்தை ரௌடிகளும்,சமூக விரோதிகளும் மீறும்பட்சத்தில் 5 மாதம் சிறையில் அடைக்கப்படுவார் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com