எதிர்க்கட்சிகளின் திருத்தங்களுடன் மாநிலங்களவையில் நிறைவேறியது நிதி மசோதா     

பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன்மீதான விவாதம் முடிவடைந்த நிலையில்,
எதிர்க்கட்சிகளின் திருத்தங்களுடன் மாநிலங்களவையில் நிறைவேறியது நிதி மசோதா     

புதுதில்லி: பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன்மீதான விவாதம் முடிவடைந்த நிலையில்,  மாநிலங்களவையில் நிதி மசோதா  தாக்கல் செய்யப்பட்டு இன்று விவாதம் நடத்தப்பட்டது.

இந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்யும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இவற்றில் காங்கிரஸ் கொண்டு வந்த 3 திருத்தங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொண்டு வந்த 2 திருத்தங்கள் என மொத்தம் 5 திருத்தங்களை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி பதிலளித்தார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றதும் நடைமுறைக்கு வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com