கார்பைட் கல் வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாம்பழத்தை விரைவாக பழுக்க வைக்க கார்பைட் கற்களை பயன்படுத்தினால் கடும்
கார்பைட் கல் வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாம்பழத்தை விரைவாக பழுக்க வைக்க கார்பைட் கற்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா எச்சரிக்கை விடுத்தார்.

 காஞ்சிபுரம் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னைய்யா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பேசும்போது: எனவே சுகாதார கேடுகள் நிறைந்த பாதுகாப்பற்ற முறையில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் பொதுமக்கள் உட்கொள்ளக் கூடாது. 

மேலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழகள் கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கக் கூடாது. அப்படி விற்பனை செய்தால் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து சுதாகார ஆய்வாளர்கள் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.   

மேலும் பாலித்தீன் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஐஎஸ்ஐ முத்திரையுடன் உள்ளவையா என்பதை உறுதி செய்யவேண்டும். மேலும் அச்சடிக்கப்பட்ட செய்தி தாள்களில் மடித்து கொடுக்கப்படும் உணவு பொருட்களை உண்ணக்கூடாது. பால் கலப்படத்தை தடுக்கும் வகையில் பால் கலப்பட தடுப்பு ஆணையம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். 

ஆட்டிறைச்சி உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு உட்பட்ட இறைச்சி கூடத்தில் வெட்டப்பட்டது என சான்று பெற்ற ஆட்டிறைச்சியைத்தான் விற்பனை செய்ய வேண்டும், பாதுகாப்பற்ற. தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செüரிராஜன், சார் ஆட்சியர் (பயிற்சி) அருண்ராஜ, உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், பழனி மற்றும் அரசு அலுவலர்கள், மாவட்ட ஓட்டல் சங்க தலைவர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com