சாலையில் திடீர் எண்ணெய் படலம்: வாகனங்கள் வழுக்கி விழ காரணம் என்ன?

சென்னையில் பேசின் பிரிட்ஜ் பாலம் அருகே லாரியில் இருந்து எண்ணெய் கொட்டியதால் சாலைகளில் எண்ணெய் பரவியது.
சாலையில் திடீர் எண்ணெய் படலம்: வாகனங்கள் வழுக்கி விழ காரணம் என்ன?

சென்னை: சென்னையில் பேசின் பிரிட்ஜ் பாலம் அருகே லாரியில் இருந்து எண்ணெய் கொட்டியதால் சாலைகளில் எண்ணெய் பரவியது. இதனால்  த்துக்குள்ளாயினர். இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் காயம் ஏற்பட்டது.

பேசின் பிரிட்ஜ் பாலம் அருகே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு லாரியில் இருந்து எண்ணெய் சாலையில் கொட்டியது. ஆறாக ஓடிய எண்ணெய் படலத்தால் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. 6 பேருக்கு சற்று பலத்த காயமேற்பட்டது. மேலும் சாலையில் எண்ணெய் படலம் பரவலாக உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குப்பைகளை ஏற்றி வரும் லாரிகளில் இருந்து கசியும் கழிவுகள் சாலையில் படிந்திருந்தது. பல மாதங்கள் கழித்து சென்னையில் நேற்று மாலையும் இன்றும் ஆங்காங்கே சாரல் மழையும், சில இடங்களில் லேசான தூறல் மழை பெய்ததால் வழவழப்பாக மாறியது. லாரியில் இருந்து எண்ணெய் கொட்டுவது தாமதமாக தெரியவந்ததால் பல சாலைகளில் எண்ணெய் படலம் காணப்பட்டது. எண்ணெய் படலத்தால் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பிரேக் பிடிக்க முடியாமல் வாகனத்துடன் சறுக்கினர். இதில் இரு சக்கரவாகனத்தில் வந்தவர்கள் வழுக்கி விழுந்ததில் பலருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் இந்த எண்ணெய் படலம் புரசைவாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், கிண்டி, செல்லும் சாலைகளிலும் பரவியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் எண்ணெய் படலம் பரவியதால் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைந்தனர். இந்த நிலையில் வாகன ஓட்டிகள் சாலையில் கவனமாக செல்லுமாறு மாநகர போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சாலைகளில் மணலை தூவி, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

கன மழை பொழிந்தால் சாலைகளில் படிந்திருக்கும் எண்ணெய் படலம் முற்றிலுமாக அகன்றிடும். ஆனால், தூறல் மழையால் எண்ணெய் படலம் சாலையில் அப்படியே தங்கி விடுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது பிரேக் பிடித்தால்கூட வாகனம் நிற்காமல் வழுக்கி விழுவதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com