இலங்கையில் பெருவெள்ளம்: 3 போர்க் கப்பல்களில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்துள்ளது இந்தியா

இலங்கையில் கனமழை காரணமாக பல பகுதிகளில் பெருவெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கனமழை காரணமாக பல பகுதிகளில் பெருவெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மீட்பு பணிக்காக இந்தியாவில் இருந்து 3 போர்க்கப்பல்களில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய கப்பல் ஐஎன்எஸ் கிர்ச் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து ஜலஸ்வா என்ற கப்பல் நிவாரண பொருட்களுடன் ஞாயிறு மதியம் கொழும்பு சென்றடையும். இந்த கப்பலில் மீட்பு பணிக்கான ரப்பர் படகுகளும், ஹெலிகாப்படர்களும் உள்ளன.

அதேபோன்று கொச்சி துறைமுகத்தில் இருந்து ஐஎன்எஸ் ஷர்துல் கப்பல் புறப்பட்டு சென்றுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை மீண்டும் ஒரு பெருவெள்ள அபாயத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com