பா.ஜ.க. அரசு கடந்த  3 ஆண்டுகளில் 813.76 கோடி மனித வேலை நாட்களை  உருவாக்கியுள்ளது: நரேந்திர சிங் தோமர் 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த  3 ஆண்டுகளில் 813.76 கோடி மனித வேலை நாட்களை உருவாக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று கூறினார்.
பா.ஜ.க. அரசு கடந்த  3 ஆண்டுகளில் 813.76 கோடி மனித வேலை நாட்களை  உருவாக்கியுள்ளது: நரேந்திர சிங் தோமர் 

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த  3 ஆண்டுகளில் 813.76 கோடி மனித வேலை நாட்களை உருவாக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று கூறினார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: - மோடி தலைமையிலான அரசில் கிராமப்புற வளர்ச்சிக்கான செலவினங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக 2013-14-ம் ஆண்டில் ரூ. 58,630 கோடியாக இருந்த  கிராமப்புற வளர்ச்சிக்கான செலவினங்கள்  2016-17ல் ரூ. 95,099 கோடியாக உயர்ந்துள்ளது.

சுமார் 62 விழுக்காடு அதிகரித்து கிராமப்புறங்களின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது. மேலும் 2017-18ம் ஆண்டுக்கான ஊரக வளர்ச்சி நிதியாக 1,05,448 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு முக்கிய திட்டங்கள் மூலம் 813.76 கோடி பேர் வேலை வாய்ப்பை பெற்ற்றுள்ளனர். குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 636.78 கோடி வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 98.97 கோடி பேரும், பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் 78.01 கோடி பேரும் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராமப்புற சுகாதாரம் 42.01 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்றும்  2017 ஆம் ஆண்டு மே மாதம் வரை  மூன்று மாநிலங்கள்  137 மாவட்டங்கள் 1.95 லட்சம் கிராமங்களில் சுகாதாரம் பேணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை இந்த ஆண்டு இறுதிக்குள் 300 கிராமங்களுக்கு விரிவுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் தோமர் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதம் சட்டத்தின் கீழ் 96 சதவீத தொழிலாளர்களுக்கு மின்னணு முறையில் ஊதியம் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 2016-17 ஆம் ஆண்டில், 1.23 கோடி பேர் இந்த திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com