ஊழலை அடையாளமாக கொண்டுள்ள காங்கிரஸ் ஹிமாச்சல தேர்தல் களத்தை விட்டு ஓடியது: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு

ஊழலை மட்டுமே தனது அடையாளமாக கொண்டு காங்கிரஸ், ஹிமாச்சல பிரதேச தேர்தல் களத்தை விட்டு ஓடிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி
ஊழலை அடையாளமாக கொண்டுள்ள காங்கிரஸ் ஹிமாச்சல தேர்தல் களத்தை விட்டு ஓடியது: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு

உனா: ஊழலை மட்டுமே தனது அடையாளமாக கொண்டு காங்கிரஸ், ஹிமாச்சல பிரதேச தேர்தல் களத்தை விட்டு ஓடிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  

உனா என்ற இடத்தில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது: 
ஹிமாச்சல பிரதேச தேர்தலில் போட்டியில்லாமல் போய் விட்டது. எனக்கு இந்த தேர்தலில் விருப்பம் இல்லை. சோகமாக இருக்கின்றேன் ஏன் என்றால் காங்கிரஸ் களத்தை விட்டு ஓடிவிட்டது. இந்த தேர்தல் ஒருதலைபட்சமாகவிட்டது.  ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக அலை வீசுகிறது. இந்த தேர்தலில் பாஜக போராட தேவை இல்லை.

முழு ஈடுபாட்டுடன் அரசு செயல்படுவதை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அரசு செலவிடும் பணம், மக்கள் நலத்திட்டங்களுக்கு செல்வதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். 

மக்கள் விருப்பத்திற்கேற்ப நாங்கள் செயல்படுகிறோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மூத்த குடிமக்களுக்கு சுகாதாரம், குழந்தைகளுக்கு கல்வி ஆகியவற்றை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இதற்கு முன் இவ்வாறு மக்களின் உற்சாகத்தை நான் பார்த்தது இல்லை. இது மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர் என்பது தெளிவாகியுள்ளது. ஊழல் மட்டுமே தங்களின் ஒரே அடையாளமாக கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.

மேலும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உட்கட்டமைப்பு வளர்ச்சி குறைவாக இருந்ததன் காரணம் என்ன? நாங்கள் ஆட்சிக்கு வந்த 3 வருடத்திற்கு பின் இதனை மாற்றியுள்ளோம் என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com