ஊழலுக்கு எதிரான போர் தொடரும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஊழலுக்கு எதிரான போர் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான போர் தொடரும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

குல்லு: ஊழலுக்கு எதிரான போர் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சல பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது அங்கு நடைபெறும் காங்கிரஸ் அரசை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற மத்தியில் ஆளும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

பாஜகவுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில், குல்லு மற்றும் பலம்ப்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரு.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த நடவடிக்கைக்கு பின்னர் 3 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இவற்றில் சுமார் 5 ஆயிரம் நிறுவனங்களில் நடைபெற்ற சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தொடர்பான மோசடிகள் விசாரணையில் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த 3 லட்சம் நிறுவனங்களும் தங்களது அலுவலகங்களில் இரண்டு நாற்காலிகள், ஒரு மேஜையை வைத்துகொண்டு பலகோடி ரூபாய் கருப்புப் பணத்தை பரிவர்த்தனை செய்துள்ளன என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

பண மதிப்பு இழப்பு கட்டாயம் என யஷ்வந்த்ராவ் சவான் தலைமையிலான குழு பரிந்துரை செய்தும்,  நாட்டின் நலனைவிட தனது கட்சியின் நலன் முக்கியமாக பட்டதால் அதை அமல்படுத்த இந்திரா காந்தி மறுத்து விட்டார் என்று மோடி குற்றம்சாட்டினார். மேலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை எடுத்திருந்தால் நான் இதை செய்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. காங்கிரஸையும், ஊழலையும் பிரிக்கவே முடியாது. அவை மரமும் வேரும் போல்தான் என்றார். 

ஊழல் வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த காங்கிரஸ் தலைவர்கள் ஊழலைப்பற்றி இப்போது பேசுகிறார்கள். காங்கிரசின் ஒரே அடையாளம் ஊழல் ஒன்றுதான். தற்போது பினாமி சொத்துகளின் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வந்து விடுவேன் என்ற பயம் காங்கிரஸ் கட்சிக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட காங்கிரஸார் ஆத்திரத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை நமது நாட்டில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழலாகும்.

அந்த நாளை கருப்பு தினமாக அனுசரிக்க காங்கிரஸ் தலைமையிலான 18 கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிகள் முடிவு செய்து கருப்பு தின போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கருப்பு தின போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகளை தூண்டிவிடுவதன் மூலம், அவர்களது கோபம் குளிர்ச்சியடையாது என்றும் என்னுடைய கொடும்பாவிகளை எரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியால் என்னை பயமுறுத்த முடியாது என்றும் ஊழலக்கு எதிரான எனது போர் தொடரும் என்றும் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com