இந்த நாளுக்கு ஆதரவளித்த 125 கோடி மக்களுக்கும் தலைவணங்குகிறேன்: பிரதமர் மோடி 

ஊழல், கறுப்புப்பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்த இந்த நாளுக்கு ஆதரவு அளித்த 125 கோடி மக்களுக்கும் தலைவணங்குகிறேன் என்று பிரதமர் நரேந்திர
இந்த நாளுக்கு ஆதரவளித்த 125 கோடி மக்களுக்கும் தலைவணங்குகிறேன்: பிரதமர் மோடி 

புதுதில்லி: ஊழல், கறுப்புப்பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்த இந்த நாளுக்கு ஆதரவு அளித்த 125 கோடி மக்களுக்கும் தலைவணங்குகிறேன் என்று தனது டுவிட்டர் பக்க செய்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

கடந்த 2016 நவ.8-ஆம் தேதி இதே நாள் இரவு எட்டு மணிக்கு நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சுனாமி தாக்கியதுபோல உயர்மதிப்புடைய பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். ரூ.500, ரூ.1,000 செலாவணிகள் செல்லாததாக்கப்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஊழலை எதிர்கொள்வது, கள்ள நோட்டுகளை அழிப்பது, தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது, ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைப்பது, வரி வசூலை அதிகரிப்பது உள்ளிட்ட குறிக்கோள்களை முன்வைத்தார். இதனால் ஒட்டுமொத்த இந்தியாவே பரபரப்புக்குள்ளானது. இந்த நடவடிக்கை வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. இது அரசியல் தளத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. 

செலாவணி மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சரியாக இன்றுடன் ஓராண்டு கடந்துவிட்டதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்க செய்தில், ‛‛ ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க அரசு மேற்கொண்டுள்ள இந்த நாளின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வரும் 125 கோடி இந்திய மக்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்.'' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 125 கோடி மக்களின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும் பொருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கறுப்புப்பணத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கை குறித்த தங்களது கருத்துகளை NM App-இல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com