காலி மனைகளில் நீர் தேங்குவது தொடர்பாக ஆளுநர் கிரண்பேடி ஆய்வு

டெங்கு பாதிப்பு கடுமையாக உள்ள நிலையில் புதுச்சேரி நகரில் காலி மனைகளில் நீர் தேங்குவது
காலி மனைகளில் நீர் தேங்குவது தொடர்பாக ஆளுநர் கிரண்பேடி ஆய்வு

புதுச்சேரி:  டெங்கு பாதிப்பு கடுமையாக உள்ள நிலையில் புதுச்சேரி நகரில் காலி மனைகளில் நீர் தேங்குவது தொடர்பாக ஆளுநர் கிரண்பேடி புதன்கிழமை அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறைகள் சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் காலி மனைகளில் நீர் தேங்குவதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. எனவே காலி மனைகளில் நீர் தேங்காமல் தடுக்க வேண்டும். இல்லையென்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில் புதுச்சேரி கிருஷ்ணா நகர், எழில் நகர் பகுதிகளில் காலி மனைகளில் நீர் தேங்குவது தொடர்பாக ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத், நகராட்சி ஆணையர் ரமேஷ், எஸ்.பி. வெங்கடசாமி மறறும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

இதுதொடர்பாக ஆளுநர் கிரண்பேடி கூறியதாவது}

பல்வேறு காலிமனைகளை அதன் உரிமையாளர்கள் கவனிக்காத நிலை உள்ளது. மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலுக்கு பின்னரும், மனை உரிமையாளர்கள் எந்த துப்புரவு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனைகளில் குப்பைகள், கழிவுகள், கழிவுநீர் அடைப்பு, நீர் தேக்கம் போன்றவை உள்ளன. விஷ ஜந்துக்கள் பூச்சிகள் நடமாட்டத்துக்கு ஏதுவாக உள்ளன. இதனால் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் தொல்லைக்கு ஆளாகின்றனர்.

மேலும் பருவமழையும் நிலையை சிக்கலாக்கி விடுகிறது. எனவே வருவாய், நகராட்சி காவல்துறையினர் இணைந்து செயல்பட வேண்டும். இந்திய தண்டனைச் சட்டம் 133}ன் கீழ் காலி மனைகளை தூய்மையாக பராமரிக்காதவர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும். அப்படியும் நடவடிக்கை இல்லை என்றால் 188 பிரிவின் கீழ் விதிமீறல் வழக்கு பதியலாம். போலீஸôர் தானாகவே வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com