ஒரே நிற உடை அணிந்து கைக்குலுக்கி புகைப்படம் எடுத்துகொண்ட டிரம்ப் - புதின்

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (ஏபிஇசி) வருடாந்திர மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர்
ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்து கைக்குலுக்கி கொண்டனர்.
ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்து கைக்குலுக்கி கொண்டனர்.

வியத்நாம்: ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (ஏபிஇசி) வருடாந்திர மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் ஒரே நிற உடை அணிந்து வந்திருப்பது குறித்து ஒரு சில வார்த்தைகளை பேசிக்கொண்டு கைக்குலுக்கி புகைப்படம் எடுத்துகொண்டனர். 

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (ஏபிஇசி) ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில் சீன தபெய் தவிர மற்றைய நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். உச்சி மாநாடுகள் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஏபெக் நாடொன்றில் நடைபெறும். இதில், அரசுத் தலைவர்கள் உச்சிமாநாடு நடைபெறும் நாட்டின் தேசிய உடையில் இம்மாநாட்டில் கலந்து கொள்வது ஒரு சிறப்பம்சமாகும். 

இந்த ஆண்டிற்கான ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (ஏபிஇசி) வருடாந்திர மாநாடு வியத்நாமில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அனைத்து தலைவர்களும் அந்நாட்டின் தேசிய உடையில் கலந்துகொண்டனர். முதல் நாள் மாநாட்டின் போது அனைத்து தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்யா அதிபர் புதினும் வியத்நாமின் பாரம்பரிரயமான நீல நிற உடைகளை அணிந்து வந்தனர். அப்போது இருவரும் ஒருவருக்கொருவரை பார்த்து சிரித்தபடியும் கைக்குலுக்கிக் கொண்டனர். டிரம்ப் நட்பு முறையில் புதினுடைய தோளில் கைகளை வைத்தும் சிரித்தபடியும் ஒரு சில வார்த்தைகள் பேசிக் கொண்டனர். பின்னர் நட்பு முறையாக ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். 

இந்த பயணத்தின் போது டிரம்ப், புதினை தனிப்பட்ட முறையில் சந்திக்க மாட்டார் என வெள்ளை மாளிகை செய்தியாளர்களின் செயலாளர் சாரா சாண்டர்ஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com