4 ஆண்டுகளுக்குள் டெபிட், கிரெடிட் கார்டுகள், ஏ.டி.எம் எண்ணிக்கை குறைக்கப்படும்:  அமிதாப் கண்ட் அதிரடி பேச்சு 

அடுத்த 4 ஆண்டுகளுக்குள் டெபிட், கிரிடிட் கார்டு பயன்பாடு மற்றும் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும் செல்போன் வழியிலான
4 ஆண்டுகளுக்குள் டெபிட், கிரெடிட் கார்டுகள், ஏ.டி.எம் எண்ணிக்கை குறைக்கப்படும்:  அமிதாப் கண்ட் அதிரடி பேச்சு 

நொய்டா: அடுத்த 4 ஆண்டுகளுக்குள் டெபிட், கிரிடிட் கார்டு பயன்பாடு மற்றும் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும் செல்போன் வழியிலான பண பரிமாற்றம் பெருகி விடும் என 'நிதி ஆயோக்' அமைப்பின் தலைவர் அமிதாப் கண்ட்  தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பான நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கண்ட் நேற்று நொய்டாவில் நடந்த பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: 

அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் நமது நாட்டில் கடன் அட்டைகள் (கிரெடிட் கார்டுகள்), பற்று அட்டைகள் (டெபிட் கார்டுகள்), தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் (ஏ.டி.எம்.) பயன்பாடு மிகவும் குறைந்து விடும். எந்தவொரு பண பரிமாற்றத்துக்கும் நாம் செல்போன்களை பயன்படுத்த தொடங்கி விடுவோம்.

தேவையற்ற ஏடிஎம்கள் கண்டறியப்பட்டு அதன் எண்ணிக்கை குறைக்கப்படும். செல்போன் மூலம் பரிவர்த்தனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச அளவில் ஆதார், செல்போன், வங்கி கணக்கு அதிகம் வைத்திருப்பவர்களை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. 

2022-இல் வறுமை இல்லாத இந்தியா உருவாகும். நமது நாட்டின் மக்கள் தொகையில் 72 சதவீதத்தினர், 32 வயதுக்கும்கீழ் உள்ளவர்கள். அமெரிக்கா, ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில் இது நமக்கு மிகவும் சாதகமான அம்சம். 2040 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 72 சதவிகிதம் பேர் 32 வயதிற்கும் குறைவாக உள்ள இளைய மற்றும் இளம் வயதினரைப் பெற்ற நாடாக இந்தியா இருக்கும். இந்த தருணங்களில் நாம் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார். 

உலகிலேயே நமது நாட்டில்தான் 100 கோடி பயோமெட்ரிக், அதிகமான மொபைல் போன்கள், வங்கிக்கணக்குகள் உள்ளன. எனவே இனி வரும் காலத்தில் நிறைய தடைகளை ஏற்படுத்தக்கூடிய நாடாக இந்தியா இருக்கும். வரும் காலத்தில் தொழில்நுட்ப பயன்பாடு அதிகரிக்கும். கூடுதலான பண பரிமாற்றங்கள் செல்போன் வழியான பரிவர்த்தனை எளிதாக்கப்படும். இப்போதே அதிரடியாக இந்த போக்கு அதிகரித்து வருகிறது. 

உலகம் முழுவதிலும் நிலவி வரும் மிகவும் மந்தமான பொருளாதார சூழ்நிலைகளுக்கு மத்தியில், இந்தியா ஆண்டுக்கு 7.5 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது. ஆனால் 9 முதல் 10 சதவீத வளர்ச்சி அடைவதே நமக்கு சவாலாக அமைந்துள்ளது. 2 ஆண்டுகளுக்குள் வணிக ரீதியான தரவரிசையில் முதல் 50 இடங்களில் இந்தியா இருக்கும். நாடு முன்னேற வேண்டுமென்றால் புதுமைகளை புகுத்துவது அவசியம் என்று அமிதாப் கண்ட் கூறினார். 

நமது நாட்டின் பொருளாதாரம், முறையான பொருளாதாரமாக மாறுவதற்கு காகித பண புழக்கத்தை குறைத்து, டிஜிட்டல், ஆன்லைன் பரிவர்த்தனைக்கு  மாற வேண்டும் என்பதை ஊக்குவிக்க வேண்டும் என்பது தற்போது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. இது குறித்த விழிப்புணர்வையும், கல்வியையும் நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com