இந்தியர்களின் விசா விதிமுறைகளை தளர்த்த ஜப்பான் முடிவு

இந்தியர்களின் விசா விதிமுறைகளை தளர்த்த ஜப்பான் முடிவு

ஜப்பான் நாட்டிற்கு செல்லும் இந்திய வணிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக விசா விதிமுறைகளை தளர்த்த ஜப்பான் முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்  தெரிவித்துள்ளதாவது: - 

கடந்த ஒரு ஆண்டில் அதிகபட்சமாக இரண்டுமுறை ஜப்பான் சென்றவர்களுக்கு 5 ஆண்டுகள் செல்லத்தக்க மற்றும் 90 நாட்கள் ஜப்பானில் தங்கி கொள்ளும் வகையிலான புதிய விசா எடுத்து கொள்ளலாம்.

இந்த புதிய விதிகள் சுற்றுலா பயணிகள் ,வணிகர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி முறை வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com