ஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர் வங்கி உருவாக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

ஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர் வங்கி உருவாக்க வேண்டும். அப்படி சேகரிக்கும் சிறுநீரிலிருந்து யூரியா எடுத்து
ஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர் வங்கி உருவாக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

நாக்பூர்:  ஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர் வங்கி உருவாக்க வேண்டும். அப்படி சேகரிக்கும் சிறுநீரிலிருந்து யூரியா எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி  ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும் போது சுவீடன் அறிவியல் ஆய்வாளர்கள் மனிதர்களின் சிறுநீரை பரிசோதனை செய்ததில் அதில் நைட்ரஜன் சத்துக்கள் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளனர். 

சிறு நீரில் நைட்ரஜன் சத்துக்கள் இருப்பதால் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற உரங்களுக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் யூரியா லாபகரமான நடவடிக்கையாக இருக்கும்.  யூரியா உற்பத்திக்காக செலவழிப்பது பொருளாதார ரீதியாக பயன் தரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று நிதின் கட்காரி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com