நியமன எம்.எல்.ஏக்கள் தொடர்பான மத்திய உள்துறை கடிதம் முறையாக இல்லை: பேரவைத் தலைவர் வைத்திலிங்கம்

நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் தொடர்பாக மத்திய உள்துறை அனுப்பிய கடிதம் முறையான வகையில் இல்லை

புதுச்சேரி:  நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் தொடர்பாக மத்திய உள்துறை அனுப்பிய கடிதம் முறையான வகையில் இல்லை என சட்டப்பேரவைத் தலைவர் வி.வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளை முன்னிட்டு கடற்கரைச் சாலையில் உள்ள அவரது சிலைக்கு பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், மற்றும் பலர் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் வைத்திலிங்கம் கூறியதாவது:

நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் தொடர்பாக மத்திய உள்துறை அனுப்பிய கடிதம் உரிய வகையில் இல்லை என்பதால் ஏற்க முடியாது. மேலும் இதுதொடர்பாக புதுச்சேரி தலைமைச் செயலாளர் வெளியிட்ட அரசாணையும் உரிய வகையில் இல்லை.

வாரியத் தலைவர்கள் நியமனத்துக்கு விதிமுறைகள் வேறு, நியமன எம்.எல்.ஏக்களை நியமிப்பதற்கான விதிகள் வேறு. இரண்டும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

காங்கிரஸ் மாநில தலைவர் நமச்சிவாயம் கூறியதாவது-

நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் சரியான முடிவை எடுத்துளளார். வரும் 23}ம் தேதி சட்டப்பேரவை கூடும் போது, அவர்கள் உள்ளே நுழைய முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பாஜக சார்பில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டால் அதை காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com