சட்டப் பேரவைக்கு போகாமல் இசை நிகழ்ச்சியில் நடனம் ஆடிய எம்.எல்.ஏ: வைரல் வீடியோ

கர்நாடக மாநிலத்தின் பெல்காம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அம்பரீஷ், சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில்
சட்டப் பேரவைக்கு போகாமல் இசை நிகழ்ச்சியில் நடனம் ஆடிய எம்.எல்.ஏ: வைரல் வீடியோ

கர்நாடக மாநிலத்தின் பெல்காம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அம்பரீஷ், சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாமல், இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவு வருகிறது.

கர்நாடக மாநில சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பெல்காம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ள அம்பரீஷ் நேற்று அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், நேற்று பெங்களூருவில் நடைபெற்ற சினிமா இசை நிகழ்ச்சி ஒன்றில் அம்பரீஷ் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது தொடர்பாக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கூறும் போது, அம்பரீஷ் வேறு விதமான அரசியல்வாதி என்றும் இதை பொருட்படுத்த தேவையில்லை என்றார். அம்மாநில காங்கிரஸ் ஆட்சியில் இதுவரை 14 கூட்டத்தொடர்கள் என, மொத்தம் 218 நாட்கள் சட்டப்பேரவை கூடியுள்ளது. ஆனால், வெறும் 4 நாட்கள் மட்டுமே அம்பரீஷ் அவைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com