இந்தியர்கள் பதுக்கும் கருப்பு பணம் குறித்து தகவல் அளிக்க சுவிட்சர்லாந்து பாராளுமன்ற குழு ஒப்புதல்

சுவிட்சர்லாந்து நாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் குறித்த தகவல்களை உடனடியாக அளிப்பதற்கான இரு நாடுகளுக்கும் இடையே
இந்தியர்கள் பதுக்கும் கருப்பு பணம் குறித்து தகவல் அளிக்க சுவிட்சர்லாந்து பாராளுமன்ற குழு ஒப்புதல்

பெர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் குறித்த தகவல்களை உடனடியாக அளிப்பதற்கான இரு நாடுகளுக்கும் இடையே ஒரு தானியங்கி தகவல் பரிவர்த்தனை ஒப்பந்தத்திற்கான ஒப்புதலை சுவிட்சர்லாந்து பாராளுமன்ற குழு வழங்கி உள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பதற்கு மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதுகுறித்த ஒப்பந்தம் குறித்து சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தின் மேல்-சபையின் முக்கிய குழுவான பொருளாதார விவகாரங்கள் மற்றும் வரிகளுக்கான ஆணையம்  ஆய்வு நடத்தியது.

கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி நடந்த இந்த குழுவின் கூட்டத்தில், ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனினும் இந்த ஒப்பந்தத்தில் தனிநபர் உரிமைகளுக்கான வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியது. இதுகுறித்து சுவிஸ் அரசு பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தனிநபர் உரிமைகளுக்கான சட்ட வழக்குகளை மீறி, எந்தவொரு தகவல் பரிமாற்றமும் நடைபெறாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறியது.  

இந்தியா மற்றும் 40 நாடுகளுடன் கருப்பு பணம் பற்றிய தகவல்களை பகிர வகை செய்யும் இந்த ஒப்பந்தத்துக்கு சுவிஸ் பாராளுமன்ற கீழ்சபை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது. 

இந்த ஒப்பந்தம் இறுதி ஒப்புதலுக்காக வருகிற 27-ஆம் தேதி தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேல்-சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த உடன்படிக்கை சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் செலுத்துபவர்கள் குறித்த விவரங்களை தொடர்ச்சியாக அணுகுவதற்கு உதவுகிறது. மேலும் இந்த கட்டமைப்பின்கீழ் பரிமாற்றம் செய்யக்கூடிய கணக்கு எண், பெயர், முகவரி, பிறந்த தேதி, வருமான வரி எண், வட்டி, ஈவுத்தொகை, காப்பீட்டுக் கொள்கைகளிலிருந்து வருமானங்கள், கணக்குகள் மற்றும் நிதி சொத்துகளின் விற்பனைக்கு வருவாய் ஆகியவற்றில் அடங்கும்.

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கியிடம் கணக்கு வைத்திருக்கும் ஒருவரின் நிதிக் கணக்கு விவரங்களை அங்கே அதிகாரிகள் தெரிவிப்பார்கள்; சுவிஸ் அதிகாரி தாமாகவே இந்தியாவின் நபரை குறித்த தகவலை அனுப்பி, அந்த நபரின் விவரங்களை ஆராயலாம். எல்லை தாண்டிய வரி ஏய்ப்பை தடுப்பதற்கு உதவுவதற்காக, இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட கிட்டத்தட்ட 100 நாடுகள், இந்த உலக அளவிலான தரநிலைகளை (AEOI) தானியங்கி பரிமாற்றத்திற்கு இதுவரை ஒப்புதல் அளித்துள்ளது. 

கருப்பு பணம் பதுக்கல் தொடர்பான தகவல்களை சுவிட்சர்லாந்து அரசு, தாமாகவே இந்தியாவுடன் பரிமாறிக்கொள்வதற்கு ஏற்ற வகையில் இந்தியாவும், சுவிட்சர்லாந்து அரசும் கடந்த ஆண்டு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டன. இந்த ஒப்பந்தத்துக்கு சுவிட்சர்லாந்து அரசு முறைப்படி ஜூலையில் ஒப்புதல் அளித்தது.

இருப்பினும், சுவிட்சர்லாந்தில் உள்ள உள்நாட்டு வங்கி வாடிக்கையாளர்களின் இரகசியத்தன்மை AEOI ஆல் பாதிக்கப்படாது. இதன்மூலம் இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன ரகசிய பண பரிமாற்ற விவரங்களை, இந்திய அரசுக்கு அந்த நாட்டு அரசு தாமாகவே வழங்கும். இது வரும் 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் தேசியக் கவுன்சில் செப்டம்பர் மாதம் அங்கீகாரம் வழங்கியது. 

மத்திய அரசின் செயலுக்கு இந்தியா மற்றும் பிற நாடுகளுடனான ஒப்பந்தம் மற்றும் பிற ஆபத்துக்களை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சிகள் ஆட்சேபனையை எழுப்பியது, ஆனால் அந்த ஆட்சேபனைகள் தேசிய கவுன்சிலின் பெரும்பான்மையால் நிராகரிக்கப்பட்டது, எந்தவொரு வாக்கெடுப்புக்கும் இது பொருந்தாது. அதாவது நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பின்னர் அதன் நடைமுறைக்கு எந்தவொரு நடைமுறை தாமதமும் இருக்கக்கூடாது என்பதாகும். மேலும் இந்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிக்கையில், அப்போதைய மன்றத்தின் பொருளாதார விவகாரங்கள் குழு இந்தியா மற்றும் பிற நாடுகளுடன் தானியங்கி தகவல் பரிமாற்ற கட்டமைப்பில் சில கூடுதலான பாதுகாப்பை அளிக்க வேண்டும் என அரசாங்கத்தை தேசிய கவுன்சில் கேட்டுக்கொண்டது. 

முன்னதாக, இந்தியா மற்றும் பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் போது, ​​சுவிட்ஸர்லாந்து இரகசியத்தன்மை மற்றும் தரவு பாதுகாப்புக்கு கண்டிப்பாக கடைபிடித்து வந்தது. ரகசியத்தன்மை மற்றும் தரவு பாதுகாப்புத் தேவைகள் விவகாரங்களில் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டியது குறித்து தரவின் முதல் பரிவர்த்தனைக்கு முன்னர் சுவிஸ் அரசாங்கம் ஒரு நிலையான அறிக்கையை தயாரித்து அளிக்கும்.

தானியங்கி தகவல் பரிமாற்ற உடன்படிக்கை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் சில வெளிநாடுகளில் சிலர் துன்புறுத்தப்படலாம் மற்றும் அதற்கேற்ப வலுவான சட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரைத்திருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளது. இந்த உடன்படிக்கை பாராளுமன்றத்தின் மேல்-சபை ஒப்புதல் பெறப்பட்டவுடன், இந்தியாவின் மற்றும் சுவிட்சர்லாந்துக்கு இடையேயான தகவலின் தானியங்கி பரிமாற்றம் அமலுக்கு வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com