நியூ கலேடோனியா அருகே 7.0 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நியூ கலேடோனியா அருகே தெற்கு பசிபிக் கடல் பகுதியில் லாயல்டி தீவிகளின் கிழக்குப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

சிட்னி: நியூ கலேடோனியா அருகே தெற்கு பசிபிக் கடல் பகுதியில் லாயல்டி தீவிகளின் கிழக்குப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. இதனால் நியூ கலேடோனியா மற்றும் அருகிலுள்ள வனுவாட்டு பகுதிகளை நோக்கி சிறிய அளவிலான சுனாமி ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனாலும் ஆபத்துகள் பெரும் ஆஐபாலும் கடந்து விட்டதாகக் கூறிப்பட்டுள்ளது. 

ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்க பகுதியில் இருந்து 300 கி.மீட்டர் (186 மைல்) தொலைவில் அமைந்துள்ள கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. நியூ கலேடோனியாவில் ஆரம்பத்தில் 82 கி.மீட்டர் (51 மைல்கள்) தொலைவில், கிழக்கில் 10 கி.மீட்டர் (6 மைல்கள்) ஆழத்தில் தாக்கி உள்ளது. அலைகள் அதிக உயரத்திற்கு செல்லும் அளவை விட கூடுதலாக ஒரு மீட்டர் உயரத்திற்கு சென்றுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நியூ கலேடோனியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு நிறுவனம் கடலோர பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற்றுவதற்கான எந்த திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஹவாய் ஆகியவற்றில் உள்ள அதிகாரிகள், அந்த நாடுகளின் கடற்கரைகளுக்கு எந்த சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்துள்ளனர். 

இது கடந்த 12 மாதங்களில் நடந்த மூன்றாவது பெரிய நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com