தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதல்வர் பழனிசாமி

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி
தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதல்வர் பழனிசாமி

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். 

மேலும் வல்லநாடு அருகே அகரத்தில் தடுப்பணை கட்டப்படும். தூத்துக்குடி மாநகராட்சியின் 4வது குடிநீர் திட்டம் ரூ.282 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளது.  திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டம் தூத்துக்குடி என்று கூறினார். 

மேலும் அமரர் சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூரில் மணி மண்டபம் கட்டப்படும் 2018-19-ல் மணி மண்டபம் கட்டும் பணிகள் துவங்கும் என்றும் கூறினார்.  அதிமுகவின் ஒரு தொண்டனைக்கூட தொட்டுப்பார்க்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பொய்யை சொல்லிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என்று முதல்வர் பழனிசாமி கூறினார். 

மேலும் பேசிய அவர் ஏரல்-ஐ தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய வருவாய் வட்டம்
தோற்றுவிக்கப்படும். கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில், பெரியசாமிபுரம் மற்றும் அகிலாண்டபுரம் ஆகிய இடங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள் அமைக்கப்படும். அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் தூத்துக்குடி வ.உ.சி. சந்தையினை நவீனப்படுத்தி, வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன், புதிய வணிக வளாகம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தூத்துக்குடி மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளான சங்கரப்பேரி, மீளவிட்டான், தூத்துக்குடி ரூரல், முத்தையாபுரம் மற்றும் அத்திமரப்பட்டி ஆகிய பகுதிகளில் சாலைப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். தூத்துக்குடி மாநகராட்சியின் அவசர மற்றும் அத்தியாவசிய பணிகளுக்காக உரிய பணியாளர்கள் படிப்படியாக நியமிக்கப்படுவார்கள்.

தூத்துக்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு மற்றும் புதூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் 5000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கும் ஏற்படுத்தப்படும்.

மணப்பாடு கடற்கரைப் பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகள், குடிநீர் வசதி,
கழிவறை வசதிகள், வாகன நிறுத்துமிடம், கண்காணிப்பு கேமரா, வழிகாட்டிப்
பலகைகள், மீட்புப் படகுகள், கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் சாதனங்கள்
வழங்கி அப்பகுதி சுற்றுலாத் தலமாக தரம் உயர்த்தப்படும்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இயதிய மருத்துவக் கழகம் உரிய அனுமதி வழங்கியதும், மருத்துவப் பட்ட மேற்படிப்புகள் துவக்கப்படும். விளாத்திகுளம் தாலுகா, சிவஞானபுரம் கிராமத்திலும், கயத்தார் ஊராட்சி ஒன்றியம், வானரமுட்டி கிராமத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும். மூப்பியல் பிரிவு மற்றும் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு டயாலிசிஸ் கருவிகள், எண்டோஸ்கோப் ஆய்வக உபகரணங்கள் வழங்கப்படும். ஏரல் அரசு மருத்துவமனையில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

திருச்செந்தூர் சமுதாய சுகாதார மையத்தில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். கருங்குளம் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டாரங்களில் விரிவான ஆரம்ப நல்வாழ்வு சேவைகள் வழங்கப்படும்.

விளாத்திகுளம் வட்டம், பெரியசாமிபுரம் கிராமம் மற்றும் வேம்பார் கிராமத்தில் வேம்பாற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் கட்டப்படும். ஸ்ரீவைகுண்டம் வட்டம், அகரம் குடியிருப்பு அருகே வல்லநாடு கிராமத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். சாத்தான்குளம் வட்டம், பள்ளக்குறிச்சி கிராமத்தில் கருமேனி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். கோவில்பட்டி வட்டம், ஆவுடையம்மாள்புரம் கிராமத்தில் உப்போடையின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணை கட்டப்படும்.

கோவில்பட்டி வட்டம், சிதம்பரம்பட்டி கிராமத்தில் உப்போடையின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தில் உப்போடையின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். உடன்குடி, செட்டிக்குறிச்சி, அரசரி கிராமம் மற்றும் தூத்துக்குடி கடற்கரை சாலை ஆகிய 4 இடங்களில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும்.

பொட்டலூரணி – சேக்காரக்குடி – பேரூரணி – மங்களகிரி சாலையில் ஒரு சிறு பாலம் கட்டப்படும். மீனாட்சிபுரம் – வெங்கடாச்சலபுரம் சாலையில் ஒரு சிறு பாலம் கட்டப்படும். கோவில்பட்டி – கடலையூர் - முத்தாலபுரம் - பெரிலோவன்பட்டி – பிள்ளையார்நத்தம் சாலையில் ஒரு பாலம் கட்டப்படும். திசையன்விளை – உடன்குடி சாலையில் ஓர் உயர்மட்டப் பாலம் கட்டப்படும்.

கயத்தார் - கழுகுமலை சாலையில் ஓர் உயர்மட்டப் பாலம் கட்டப்படும். புதூர் - பரளச்சி சாலையில் ஓர் உயர்மட்டப் பாலம் கட்டப்படும். மீளவிட்டான் - தூத்துக்குடி ரயில்வே நிலையங்களுக்கு இடையே ரயில்வே கடவு எண் 486-இல் சாலை மேம்பாலம் மற்றும் 487-இல் அளவான பயன்பாட்டு சுரங்கப்பாதை கட்டப்படும்.

தூத்துக்குடி – கொல்லம் சாலையில் கூடுதல் சாலை மேம்பாலம் கட்டப்படும்.
இப்பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. படர்யதபுளி அருகில் பாலப் பணி மேற்கொள்ளப்படும். கோவில்பட்டி - குமாரபுரம் - கோபாலபுரம் - செட்டிக்குறிச்சி சாலையில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். கோவில்பட்டி ரயில்வே நிலையம் முதல் லெட்சுமி மில் மேம்பாலம் வரையிலான சாலையானது நான்கு வழித்தட சாலையாக அகலப்படுத்தப்படும்.

மணியாச்சி வழியாக வடக்கு நோக்கி செல்லும் 15-க்கும் மேற்பட்ட இரயில்களின் பயண வசதியைத் தூத்துக்குடி நகர மக்கள் பயன்படுத்திடும் வகையில் மீளவிட்டான் முதல் மணியாச்சி வரை இரயில் பாதையை ஒட்டி வாகனங்கள் செல்லும் வகையில் புதிய சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com