ஐந்தாவது 'உலக இணையவெளி' மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் நரேந்திர மோடி

ஐந்தாவது 'உலக இணையவெளி' மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி தில்லி ஏரோ சிட்டி வளாகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை தொடங்கி
ஐந்தாவது 'உலக இணையவெளி' மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் நரேந்திர மோடி

புதுதில்லி: ஐந்தாவது 'உலக இணையவெளி' மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி தில்லி ஏரோ சிட்டி வளாகத்தில் இன்று வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் முதன் முறையாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

பொருளாதார மற்றும் வளர்ச்சி சார்ந்த ஒத்துழைப்புகளுக்காக 97 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஒஈசிடி கூட்டமைப்பு 2011-ஆம் ஆண்டு லண்டனில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை நான்கு சர்வதேச மாநாடுகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்த கூட்டமைப்பின் சார்பில் சைபர் குற்றங்கள், சைபர் வெளி பாதுகாப்பு தொடர்பான 'உலக இணையவெளி' மாநாடு முதன்முறையாக தில்லியில் உள்ள ஏரோ சிட்டி வளாகத்தில் இரண்டு நாட்களும் நடைபெறுகிறது.

மாநாட்டில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 31 நாடுகளில் இருந்து 124 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் 33 அமைச்சர்கள் பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், தொழில் வல்லுனர்கள், சைபர் நிபுணர்கள் உள்பட பலர் கலந்துகொள்வார்கள். உலகளாவிய இணையக் கொள்கையில் உள்ளுணர்வு மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பது, தனியார் துறையினருக்கும் தொழில் நுட்பத்துறையினருக்கும் வெளியில் பாதுகாப்பு அளிப்பது ஆகியவை முக்கிய விவாதப்பொருட்களாக இருக்கும். சர்வதேச அளவில் சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்த மாநாடு பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள். 

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இம்மாநாட்டில், மத்திய அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவை நனவாக்கும் முயற்சியாக இந்த மாநாட்டை இந்தியா இந்த ஆண்டு முன்னெடுத்து நடத்துகிறது. இந்தியாவை வலிமையான டிஜிட்டல் அதிகாரம் படைத்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே பிரதமரின் இலக்கு என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com