தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடிக்கு 18வது இடம்: பிரிக்ஸ் தேர்வு

சர்வதேசத் தரத்திலான பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடிக்கு 18வது இடம் கிடைத்துள்ளது என பிரிக்ஸ் வெளியிட்டுள்ளது. 
தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடிக்கு 18வது இடம்: பிரிக்ஸ் தேர்வு

சர்வதேசத் தரத்திலான பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடிக்கு 18வது இடம் கிடைத்துள்ளது என பிரிக்ஸ் வெளியிட்டுள்ளது. 

இந்தியா, சீனா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் நடத்திய ஆய்வில், 300 பல்கலைக்கழகங்களை சர்வதேசத் தரத்திலானவை என்று தேர்வு செய்துள்ளது. 

இந்தப் பட்டியலில் சென்னை ஐஐடி 18வது இடத்திலும், தில்லி ஐஐடி 15வது இடத்திலும், பெங்களூர் ஐஐடி 10வது இடத்திலும் உள்ளன. சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்விநிறுவனங்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.

இதனைத் தெரிவித்த பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் வி.எஸ்.சவுகான், முந்தைய நடைமுறைகளை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் பல்கலைக்கழகங்களால் நாட்டின் பெருமையை உயர்த்த முடியும் என்பதை அரசும் உணர்ந்திருப்பதாக சவுகான் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com