ஜார்ஜியா: அழகிப் போட்டி நடந்த கடற்கரை ஹோட்டலில் தீ: 11 பேர் பலி

ஜார்ஜியா நாட்டின் கருங்கடல் கடற்கரை நகரமான பதுமியில் உள்ள லியோகிராண்ட் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில்

ஜார்ஜியா நாட்டின் கருங்கடல் கடற்கரை நகரமான பதுமியில் உள்ள லியோகிராண்ட் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் துரதிருஷ்டவசமாக 11 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்தனர். 

ஜார்ஜியாவின் தலைநகரான டிபிலிசியில் இருந்து 360 கிமீ தொலைவில் உள்ள கருங்கடல் கடற்கரை நகரமான பதுமியில் ஏராளமான சுற்றுலா ஹோட்டல்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று நள்ளிரவு லியோகிராண்ட் ஹோட்டலின் ஒரு தளத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென மற்ற பகுதிகளும் பரவியதால் ஹோட்டலில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். மற்ற தளங்களில் தங்கியிருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.

தீ வேகமாக பரவியதுடன் ஒட்டல் முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் புகையை சுவாசித்த பலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அவர்கள் உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தீ விபத்தில் காயம் அடைந்தும் புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் ஒருவர் இஸ்ரேலியாவை சேர்ந்தவர் என்றும் மற்றவர்கள் துருக்கியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. 

இந்த ஹோட்டலில்தான், ஞாயிற்றுக்கிழமை மிஸ் ஜார்ஜியா 2017 அழகிப் போட்டி நடைபெற்றது. அவர்களில் யாரும் ஹோட்டலில் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜார்ஜியா அதிபர் ஜியார்ஜி மார்க்வெலாஷ்விலி இரங்கல் தெரிவித்துள்ளார். 

தீ விபத்துக்கான காரணம் குறிந்த எந்த தகவலும் உடனடியாக தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com