சிறைச்சாலையில் இருந்த விலையுயர்ந்த தாவரங்களை தின்ற கழுதைகளுக்கு 4 நாட்கள் சிறை: உ.பி. போலீஸ் அதிரடி

உத்தரப்பிரதேசத்தில் விலையுயர்ந்த தாவர செடிகளை சேதப்படுத்திய 2 குதிரைகள், 2 கழுதைகளுக்கு 4 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள
சிறைச்சாலையில் இருந்த விலையுயர்ந்த தாவரங்களை தின்ற கழுதைகளுக்கு 4 நாட்கள் சிறை: உ.பி. போலீஸ் அதிரடி

உத்தரப்பிரதேசத்தில் விலையுயர்ந்த தாவர செடிகளை சேதப்படுத்திய 2 குதிரைகள், 2 கழுதைகளுக்கு 4 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம்,   உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் அரசியல்வாதிகள் தலையிட்டு வலியுறுத்திய பின்னர் அந்த விலங்குகள் வெளியிடப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம் உராய் மாவட்டத்தில் உள்ள ஜலாவூன் நகரில் உள்ள மாவட்ட சிறை வளாகத்தில் அழகிற்காக ரூ.5 லட்சம் செலவில் விலையுயர்ந்த செடிகள் மற்றும் தாவரங்கள் நட்டு வைக்கப்பட்டிருந்தன. கடந்த 24-ஆம் தேதி அந்த பகுதியில் உலாவிக் கொண்டிருந்த 2 குதிரைகளும், 2 கழுதைகளும் சிறை வளாகத்தில் நுழைந்து அங்கு நட்டு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த செடிகள் மற்றும் தாவரங்களை தின்று சேதப்படுத்தியது. 

இதையடுத்து அந்த 2 குதிரைகள், 2 கழுதைகளையும் ஜலாவூன் மாவட்ட போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்து உராய் சிறையில் அடைத்துள்ளார்.

இந்நிலையில், தனது குதிரைகள் மற்றும் கழுதைகளை காணவில்லை என கமலேஷ் என்பவர் தேடிவந்தார். அப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக யாரோ ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் உராய் சிறை நிர்வாகத்திடம் கழுதைகளை விடுவிக்கக் கோரி முறையிட்டுள்ளார். ஆனால், அதனை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. 

இதையடுத்து, பாஜகவின் உள்ளூர் பிரமுகர் உதவியை நாடியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த பாஜக பிரமுகர் உதவியுடன் காவல் நிலையம் சென்று தன்னுடைய கழுதைகளை கமலேஷ் மீட்டுள்ளார். 

4 நாள் சிறைத் தண்டனைக்குப் பிறகு, அந்த 4 விலங்குகளும் நேற்று திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளது. விலங்குகள் கடித்து சேதப்படுத்திய  செடிகள் அனைத்தும் ரூ.5 லட்சம் செலவில் அண்மையில்தான் வாங்கி வைக்கப்பட்டது” என ஜலாவூன் சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com