அரசியல் பாரபட்சமின்றி செயல்படுவேன்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேட்டி

அரசியல் பாரபட்சமின்றி செயல்படுவேன் என்று தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
அரசியல் பாரபட்சமின்றி செயல்படுவேன்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேட்டி

சென்னை: அரசியல் பாரபட்சமின்றி செயல்படுவேன் என்று தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, புதிய ஆளுநருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட பன்வாரிலால் புரோஹித்துக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் பழனிசாமி. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆளுநருக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், துணைமுதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தின் 29-வது ஆளுநராக பதவியேற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசியல் பாரபட்சமின்றி செயல்படுவேன் என்றும் எந்தவொரு முடிவாக இருந்தாலும் அது சிறியதாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் அதில் எந்த அரசியல் தலையீடும் இருக்காது. அனைத்து முடிவுகளும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே செயல்படுவேன் என தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு ஏற்ப நான் என்னுடைய ஆதரவை அளிப்பேன். தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதல்வர், அமைச்சர்களுடன் நல்ல நட்பு பாராட்டுவேன்.

மத்தி அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான நிதியைப் பெற்று, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வேன் என்றும் என்னுடைய தலைமையின் கீழ் செயல்பாடுகளில் நிச்சயம் வெளிப்படைத் தன்மை இருக்கும் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com