பாட்னா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா: பிகார் அரசும் மத்திய அரசும் இணைந்து மாநில வளர்ச்சிக்கு உதவுகின்றன - பிரதமர் மோடி பேச்சு

பிகாரில் உள்ள பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா இன்று (அக்.14) நடைபெறுகிறது.
பாட்னா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா: பிகார் அரசும் மத்திய அரசும் இணைந்து மாநில வளர்ச்சிக்கு உதவுகின்றன - பிரதமர் மோடி பேச்சு

பிகாரில் உள்ள பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா இன்று (அக்.14) நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  பிரதமர் நரேந்திர மோடி  பேசும் போது அனைவருக்கும் தீபாவளி மற்றும் சாத் பூஜா வாழ்த்துக்களை தெரிவித்தார். 

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பிகார் அரசு அமல்படுத்தியுள்ளது. அதற்காக நான் பிகார் மாநில அரசுக்கு நன்றி கூறுகிறேன். பிகார் அரசும் மத்திய அரசும் இணைந்து மாநில வளர்ச்சிக்கு உதவுகின்றன. நான் நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் பல்வேறு மக்களை சந்தித்திருக்கிறேன். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற நாம் அயராது உழைக்கிறோம். 

மேலும் 2022-ல் இந்தியா 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது, வளமான மாநிலங்கள் பட்டியலில் பீகாரும் இருக்க வேண்டும். இதற்காக மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து பணியாற்றும்.  அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாட்னா பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக சிறந்து விளங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்

நமது முதல் முன்னுரிமை கங்கை ஆற்றை தூய்மைப்படுத்துவது. என்றும் கூறினார். ரூபாய் 3,700 கோடி மதிப்பில் பல மேம்பாட்டு திட்டங்களை பிரதமர் தொடக்கிவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவுக்கு அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களும், முக்கிய அரசியல் பிரமுகர்களுமான சத்ருஹன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா, லாலு பிரசாத் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com